Tamil Nadu
July 30, 2026 02:33 AM
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற திட்டமா?
தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற திட்டம் என பரவும் தவறான தகவல்
பரவும் செய்தி
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயர் பண்டிதர் அயோத்திதாசர் நவீன பேருந்து நிலையம் என்று மாறுகிறது என சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
"கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றம் செய்ய இருப்பதாக சமூகவலைதளங்களில் பரவும் தகவல் தவறானது" என சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA ) தெரிவித்துள்ளது.
தவறான தகவலைப் பரப்பாதீர் !
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu