📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 19, 2026 03:34 PM

கிறிஸ்துவ நிகழ்ச்சியில் அமைச்சர்கள்; முதல்வரின் எச்சரிக்கை மீறப்படுகிறதா?

கிறிஸ்துவ நிகழ்ச்சியில் அமைச்சர்கள்; முதல்வரின் எச்சரிக்கை மீறப்படுகிறதா?

சென்னை: கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பு சார்பாக, 'போதகர்கள் சுவிசேஷகர்கள் கூடுகை' என்ற நிகழ்ச்சி, சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர் வன்னி அரசு கலந்து கொண்டனர். ஜாதி, மத வேறுபாடு த.வெ.க.,வில் இல்லை என்று முதல்வர் விஜய் பேசி வரும் நிலையில், சபாநாயகரின் இந்த செயல், சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில், கட்சி சார்ந்த அடையாளத்துடன் கலந்து கொள்ளக் கூடாது என, த.வெ.க.,வினருக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டார். அதோடு, உத்தரவை மீறுவோர் மீது, கட்சி சார்ந்த நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், கிறிஸ்துவ சர்ச் மற்றும் பாஸ்டர்கள் கூட்டமைப்பு சார்பாக, சென்னையில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி மத போதகர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதில், சபாநாயகர் பிரபாகர், அமைச்சர்கள் தென்னரசு, குமார், ரஞ்சித்குமார், சரத்குமார், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ்குமார், பிரகாசம், பல்லவி ஆகியோர் பங்கேற்க உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

முதல்வர் விஜய் எச்சரித்தும், வெளிப்படையாகவே, த.வெ.க., அடையாளத்துடன், கிறிஸ்துவ மத போதகர்கள் நிகழ்ச்சியில், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க இருப்பது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.