📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 16, 2026 02:01 PM

சிறந்த செலிபிரிட்டி கணவர்னா அவர்தான்.. நடிகரை புகழ்ந்த திரிஷா.. யாரை தெரியுமா?.. விஜய் இல்லை

சிறந்த செலிபிரிட்டி கணவர்னா அவர்தான்.. நடிகரை புகழ்ந்த திரிஷா.. யாரை தெரியுமா?.. விஜய் இல்லை

சென்னை: இந்தியாவின் 80வது சுதந்திர நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் முதலமைச்சரும், நடிகருமான விஜய் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் திரிஷாவும் அவரது தாய் உமாவும் கலந்துகொண்டார்கள். அவர்களுக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போதிருந்து மீண்டும் சோஷியல் மீடியா எங்கும் திரிஷா குறித்த பேச்சு எழுந்திருக்கிறது. அவரது வீடியோ ஒன்றும் திடீரென ட்ரெண்டாகியுள்ளது.

திரிஷா நடிப்பில் இந்த வருடத்தில் வந்த கருப்பு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படம் ஹிட்டான மகிழ்ச்சி மட்டுமின்றி, அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான விஜய் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான மகிழ்ச்சியும் சேர்ந்துகொண்டது. இதன் காரணமாக உற்சாகத்தின் உச்சத்தில் அவர் இருந்தாலும் அவரை சுற்றி கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. முக்கியமாக சங்கீதாவின் விவாகரத்து மனு விஷயத்தில் அவர் திரிஷா பெயர் ரொம்பவே டேமேஜ் ஆனது.

சைலென்ட்டான திரிஷா: திருமணம் மற்றும் துக்க வீடுகளுக்கு விஜய்யுடன் ஒன்றாக சென்றது, முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு வந்து விஜய் பேசியதை கண்கள் கலங்க கேட்டது என சைலெண்ட்டாக தொடர்ந்து சம்பவங்களை செய்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று தாக்கல் செய்திருந்த மனுவை திரும்ப பெற்றார் சங்கீதா. மகன் ஜேசனும் தன்னுடைய பேட்டியின்போது தந்தையை விட்டுக்கொடுக்காமல் பேசினார். எனவே மீண்டும் அந்தக் குடும்பம் ஒன்றாக சேரப்போகிறது என சந்தோஷப்பட்டார்கள் தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும்.

மீண்டும் திரிஷாவின் என்ட்ரி: மேலும் திரிஷா வேறு, 'வயதான காலத்தில் இப்படி நாடகம் போடுவதற்கு பதிலாக பணம் சம்பாதித்து அமைதியை தேடுங்கள்' என ஒரு போஸ்ட்டில் போட்டிருந்தார். உடனடியாக அந்தப் போஸ்ட்டுக்கும் விஜய் - சங்கீதா விவகாரத்துக்கும் இடையே சிலர் முடிச்சு போட்டார்கள். சூழல் இப்படி இருக்க நேற்று நாட்டின் 80வது சுதந்திர தினத்தையொட்டி விஜய் தேசிய கொடி ஏற்றி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு சங்கீதாவும், ஜேசனும் வருவார்கள் என்றுதான் விர்ச்சுவல் வாரியர்ஸ் எதிர்பார்த்தார்கள். வந்ததோ திரிஷாவும், அவரது அம்மா உமாவும்.

ஸ்டைல் சல்யூட்: விழாவுக்கு வந்தவர்கள் முதல் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசித்தார்கள். தன்னை நோக்கி விஜய் வைத்த சல்யூட்டுக்கு ஸ்டைலாக ஒரு சல்யூட்டையும் வைத்தார் திரிஷா. இந்த காட்சிகளை எல்லாம் பார்த்த ரசிகர்கள் ரத்த கண்ணீர்தான் வடித்தார்கள். விஜய் - திரிஷா விஷயத்தில் என்னதான் நடக்கிறது; இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா என நொந்துகொண்டார்கள். விரைவில் திரிஷா வேறு யாரையாவது திருமணம் செய்துகொண்டால்கூட பரவாயில்லை; நாங்களே மாப்பிள்ளை பார்க்கிறோம் என்றும் சொல்ல தொடங்கிவிட்டார்கள்.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் திரிஷாவின் பழைய பேட்டி ஒன்று காலையிலிருந்து திடீரென ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில், தனக்கு பிடித்த தென்னிந்திய நடிகர் அஜித். சரியான உடலமைப்பை கொண்ட ஆண் என்றால் ஹிருத்திக் ரோஷன் என திரிஷா கூறியிருக்கிறார். மேலும், செலிபிரிட்டிகளில் சிறந்த கணவர் என்றால் அஜித்தான். செலிபிரிட்டிகளில் சிறந்த மனைவி ஷாலினி" என்றிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களோ, அஜித் மாதிரி கணவர் கிடைக்க வாழ்த்துகள் என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.