📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 20, 2026 05:32 PM

கள்ளக்குறிச்சி உழவர் சந்தை விவசாயிகள் வயல்கள் ஆய்வு

கள்ளக்குறிச்சி உழவர் சந்தை விவசாயிகள் வயல்கள் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகளின் வயல்கள் ஆய்வு செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி உழவர் சந்தைக்கு சிறுவங்கூர், ரங்கநாதபுரம் கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், பூக்கள் கொண்டு வந்து வியாபாரம் செய்கின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி வேளாண்மை விற்பனை மற்றும் வணிகம் துணை இயக்குனர் ரமேஷ், உழவர் சந்தைக்கு கொண்டு வந்து வியாபாரம் செய்யும் விவசாயிகளின் வயல்களை ஆய்வு செய்தார்.

சிறுவங்கூர், ரங்கநாதபுரத்தை சேர்ந்த மல்லிகா, தனம், மாணிக்கம், ராமு, மண்ணாங்கட்டி, செல்வி உள்ளிட்ட 13 விவசாயிகள் சாகுபடி செய்துள்ள காய்கறிகள், பழங்கள், பூக்கள் பயிர்களின் வயல்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது வேளாண் அலுவலர் (வேளாண் வணிகம்) தமிழ்வாணன், உதவி வேளாண்மை அலுவலர் (வேளாண்மை வணிகம்) ஜெயபால், உதவி தோட்டக்கலை அலுவலர் பாலு, சந்தை நிர்வாக அலுவலர் பழனிவேல் மற்றும் விவசாயிகள் பலர் உடனிருந்தனர்.