கனடாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு உற்சாக வரவேற்பு; ஹிந்து புலம்பெயர் சமூகத்தினர் நெகிழ்ச்சி பேட்டி
ஒட்டாவா: கனடாவின் டொராண்டோவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, ஹிந்து புலம்பெயர் சமூகத்தினர் ஏராளமானோர் திரண்டனர்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு உள்ளார். கனடாவின் டொராண்டோ நகருக்கு வருகை தந்த மோகன் பாகவத், 'இந்து விஸ்வ பந்து - உலகளாவிய நட்பு' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். கனடாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜேசன் கென்னி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மோகன் பாகவத்தின் கனடா வருகைக்கு அந்நாட்டின் சில எம்பிக்கள் மற்றும் சில சிவில் சமூக அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால் கனடாவை சேர்ந்த ஹிந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. டொராண்டோவில் மோகன் பாகவத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, ஹிந்து புலம்பெயர் சமூகத்தினர் ஏராளமானோர் திரண்டனர். அமைதி, கலாசாரம் மற்றும் உலக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான ஒரு மைல்கல் தருணம் என மோகன் பாகவத் வருகையை அவர்கள் தெரிவித்தனர்.
நல்ல வாய்ப்பு!
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசுவதை கேட்க இது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு, என்றார். ''கனடாவின் எட்டு மாகாணங்களில் இருந்து 2500க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முன்வந்தனர். இது ஒரு கொண்டாட்டம்'' என ஹிந்து அமைப்பை சேர்ந்த சாவ்தா தெரிவித்தார்.
ஒரே குடும்பம்!
வரவேற்போம்!
அதிர்ஷ்டசாலிகள்!
பிரத்யேக வீடியோ