கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிகாலையில் வீட்டில் இருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வி.எஸ். பாபு வெற்றி பெற்றார். கடந்த சில வாரங்களாக நடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இவர் பங்கேற்ற நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக போட்டியிட்டு வென்றார். தற்போது அவருக்கு அதிகாலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். வயது முதிர்வு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்று அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.