’கொஞ்ச நாள் இல்ல; பயம் விட்டு போச்சு’
’கொஞ்ச நாள் இல்ல; பயம் விட்டு போச்சு’ - சூர்யா வசன பாணியில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' வசூல் சாதனை
இந்த வருடத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ’கருப்பு’ மற்றும் ’விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய திரைப்படங்கள் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
Published : September 1, 2026 at 11:33 AM IST
சென்னை: சூர்யா நடிப்பில் கடந்த மாதம் வெளியான ’விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ’சித்தாரா எண்டர்டெயிண்மென்ட்’ நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் மக்களின் பேராதரவுடன் ’விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் 240 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
’விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஓடிடி ரிலீஸ்?
இந்நிலையில் ’விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் பிரபல சினிமா வர்த்தக இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, படம் வெளியாகி இதுவரை 19 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்திய அளவில் 135.18 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. நேற்று இந்திய அளவில் மட்டும் 55 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதே நேரத்தில் மொத்தமாக வெளிநாட்டில் மட்டும் 64.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
Some bonds hold strong… and this is what the Audience, Sanjay Vishwanath and his Family have built with ❤️❤️#VishwanathAndSons crosses 240 CRORES+ WORLDWIDE GROSS and still going strong 💥💥 #BlockbusterVAS #BlockbusterVishwanathAndSons@Suriya_offl #VenkyAtluri… pic.twitter.com/CShvwwg8rz
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியான முதல் நாளில் (ஆகஸ்ட் 14) இந்திய அளவில் 15.35 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளில் 22.25 கோடி ரூபாய் வசூல் செய்தது. மேலும் தமிழ் மொழி அளவிற்கு தெலுங்கிலும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல் மன்னனாக கலக்கும் சூர்யா
ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சூர்யாவிற்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் அதிக வசூலையும் பெற்று வருகிறது. நேற்று படம் வெளியாகி 18வது நாளில் தமிழ் மொழியில் 35 லட்ச ரூபாயும், தெலுங்கு மொழியில் 40 லட்ச ரூபாயும் வசூல் பெற்றுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் இந்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூலையும் பெற்றது. அதனை மனதில் கொண்டு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் அதிக விலைக்கு விற்கப்பட்டது. இப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தால் மட்டுமே நஷ்டம் ஏற்படாது என விநியோகஸ்தர்கள் மத்தியில் கருத்து நிலவியது. அந்த வகையில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படமும் 200 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.
ஒரே வருடத்தில் சூர்யா நடித்த இரண்டு திரைப்படங்கள் அதிக வசூலை பெற்றுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்ததாக சூர்யா நடித்துள்ள 48வது திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வசூல் மன்னனாக உருவெடுத்துள்ளார்.
லக்கி பாஸ்கர் திரைப்படம் மூலம் தென்னிந்தியாவில் முன்னணி இயக்குநரான லக்கி பாஸ்கர் இயக்கிய திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். ஜிவி பிரகாஷ் இசையமைத்த இந்த படத்தில் மமிதா பைஜு மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றனர்.