📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 02, 2026 10:01 PM

டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையை திறந்து வைத்தார்

டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையை திறந்து வைத்தார்

டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையை திறந்து வைத்தார்

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் விமான நிலையம் சென்றடைந்தார். சேலம் சென்றடைந்த முதலமைச்சர் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் அணை பகுதிக்கு சென்றார்.

பட்டு வேட்டி சட்டையில் சேலம் சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு தவெகவினர், பொதுமக்கள் வழிநெடுகிலும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் விஜயை வரவேற்கும் விதமாக 40 கி.மீ. தூரத்திற்கு பேனர்கள், கொடிக்கம்பங்கள் அமைத்து தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேட்டூர் அணை நீரை திறந்து வைப்பதற்காக வருகை தந்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். காவிரியை வணங்கி மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார். அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரை முதலமைச்சர் விஜய் பூக்கள், நெல்மணிகளை தூவி வணங்கி வரவேற்றார்.

மேட்டூர் நீரை திறந்த வைத்த முதல்வரை சந்திக்க வந்த விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். முதலமைச்சர் விஜய் வருகையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணை பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.