📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 03, 2026 12:03 PM

கோவை வருகிறார் முதல்வர் விஜய்; புது ரூட்டில் தாராபுரம் செல்கிறார்

கோவை வருகிறார் முதல்வர் விஜய்; புது ரூட்டில் தாராபுரம் செல்கிறார்

கோவை: இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக தாராபுரம் செல்லும் வழியில், முதல்வர் விஜய் நாளை (4ம் தேதி) கோவை வருகிறார்.

வழக்கமாக விமான நிலையத்தில் இருந்து கோல்டுவின்ஸ், சின்னியம்பாளையம், நீலாம்பூர் வழியாக அவிநாசி சாலையை அடைந்து, அங்கிருந்து பிற பகுதிகளுக்கு செல்வது வழக்கம். நாளை அந்த தடத்தை மாற்றி, நகரின் முக்கிய பகுதிகள் வழியாக தாராபுரம் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.

விமான நிலையத்தில் இருந்து சிட்ரா, காமராஜபுரம், சிங்காநல்லூர், ஒண்டிபுதுார் வழியாக பைபாஸ் சாலையை அடைந்து தாராபுரம் செல்கிறார். இந்த தடத்தில் சாலை குறுகலாக இருப்பதாலும், நாளை விடுமுறை என்பதாலும் அதிகமான கூட்டம் திரளும் என போலீஸ் எதிர்பார்க்கின்றனர்.

அதனால் இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்படுவார்கள் என அதிகாரிகள் கூறினர்.