📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 03, 2026 12:03 PM

வில்வித்தையில் தங்கம் வென்றார் இந்தியாவின் குங்கும் மொஹோத்: ஆசிய விளையாட்டு போட்டியில் அசத்தல்

வில்வித்தையில் தங்கம் வென்றார் இந்தியாவின் குங்கும் மொஹோத்: ஆசிய விளையாட்டு போட்டியில் அசத்தல்

நகோயா: நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் மகளிருக்கான ரீகர்வ் தனிநபர் பிரிவில் இந்தியாவின் குங்கும் மொஹோத் தங்கம் வென்றார்.

17 வயதான அவர், தென் கொரியாவின் ஓ எஜினை ஷூட்-ஆஃப் முறையில் வீழ்த்தி வரலாறு படைத்தார். இறுதி சுற்றில் ஐந்து செட்கள் சமனில் முடிந்த நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்க ஷூட்-ஆஃப் நடத்தப்பட்டது. இதில் தென் கொரிய வீராங்கனை ஓ எஜின் 8-ல் அம்பை செலுத்திய நிலையில், 10-ல் அம்பை எய்தி தங்கத்தை வென்றார் குங்கும்.

இது நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் மகளிருக்கான ரீகர்வ் தனிநபர் பிரிவில் கிடைத்துள்ள முதல் தங்கமாக அமைந்துள்ளது.

ஏற்கெனவே இந்த தொடரில் மகளிர் ரீகர்வ் அணியில் தங்கம் வென்றிருந்தார் குங்கும். மேலும், கலப்பு அணிகள் பிரிவில் வெள்ளி வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோல்ஃப் விளையாட்டில் தங்கம்