📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 13, 2026 01:03 PM

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

கோவையில் தொடரும் கொலை சம்பவங்களுக்கு காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது:-

கொலை சம்பவங்கள்

தொழில் நகரம் என்ற பெருமைக்குரிய கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடரும் கொடூர கொலை சம்பவங்களால் பொது மக்களின் பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் நான்கு கொடூர கொலை குற்ற சம்பவங்கள் அரங்கேறி கோவை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும், போதைப்பொருள் பயன்பாட்டால் மாணவர்களுக்குள் ஏற்படும் மோதல்கள் கொலை வரை செல்வது தவெக அரசில் சட்டம் ஒழுங்கின் திறனற்ற செயலையே காட்டுகிறது. சிறைக்காவலில் இருக்கும் கைதிகளுக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பற்ற சூழல் இருக்கும் பட்சத்தில் காவல் துறையிடமிருந்து பொதுமக்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே.

வலியுறுத்தல்

இந்நிலை தொடர்ந்தால் கோவை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திலும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து பாதுகாப்பற்ற மாநிலம் என்ற சூழல் உருவாகும். எனவே காவல்துறை இனியும் காலம் தாழ்த்தாமல் குற்றவாளிகளை உனடியாகக் கைது செய்து, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.