📅 Tuesday, 04 August 2026 IST | ஆடி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 04, 2026 10:31 AM

கர்நாடகாவிலிருந்து தமிழக எல்லையைக் கடந்து ஓடும் உபரி நீர்

கர்நாடகாவிலிருந்து தமிழக எல்லையைக் கடந்து ஓடும் உபரி நீர்

தருமபுரி: கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் செவ்வாய்க் கிழமை (ஆகஸ்டு 4) அதிகாலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.

கர்நாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து இம்மாதம் முதல் தேதி காலையில் நொடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் காவிரியாற்றில் திறந்துவிடப்பட்டது. பின்னர் பகலில் 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

அன்று நள்ளிரவில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 25,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் கபினி அணைக்கான நீர்வரத்துக்கு ஏற்ப காவிரியில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவிலும் ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வந்தன.

இவ்வாறு திறக்கப்பட்ட உபரி நீர் 3ஆம் தேதி மாலையில் தமிழக எல்லையான ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வறட்சியால் காவிரியாறு காய்ந்து கிடந்த நிலையில் நீர்வரத்து ஒகேனக்கல்லை வந்தடைய கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்டு 4) அதிகாலையில் உபரிநீர் ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. காலை 6 மணியளவில் பிலிகுண்டுலுவில் நொடிக்கு 1,000 கன அடியாக நீர்வரத்து பதிவானது. மேலும் நீர்வரத்து சீராக உயர்ந்து வருகிறது.

இதற்கிடையே ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி புதிய மஞ்​சள் கயிற்​றில் திரு​மாங்​கல்​யம் அணிந்து பெண்​கள் வழி​பாடு நடத்​தினர்.

ஆடி மாதத்​தில் கொண்​டாடப்​படும் மிக முக்​கிய​மான விழாக்​களில் ஒன்று ஆடிப்​பெருக்​கு, ஆண்​டு​தோறும் ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்​பெருக்கு விழா கொண்​டாடப்​படும்.

தண்​ணீர்ப் பஞ்​சம், உணவுப் பஞ்​சம் ஏற்​ப​டா​மல் இருக்க வேண்​டும் என்​ப​தற்​காக ஆறு, குளம் உள்​ளிட்ட நீர்​நிலைகளில் பூசை செய்து மக்​கள் வழிபடு​வார்​கள்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அந்த வகையில் தமிழகத்​தில் திங்கட்கிழமை திருச்சி காவிரிக் கரை​யில் இந்த விழா உற்சாகமாகக் கொண்​டாடப்​பட்டது.

திருச்​சியைத் தொடர்ந்து திருநெல்​வேலி, தூத்​துக்​குடி மாவட்​டங்​களில் தாமிரபரணி, மதுரை வைகை ஆற்​றங்​கரை​யிலும் ஆடிப்​பெருக்கு விழா கோலாகல​மாகக் கொண்டாடப்பட்டது.

சென்​னையைப் பொறுத்​தவரை மெரி​னா, பெசன்ட்​நகர் கடற்​கரை​யில் திங்கட்கிழமை திருமண​மான பெண்​கள், புத்​தாடை உடுத்தி பழைய தாலிக் கயிற்​றுக்குப் பதிலாகப் புதிய மஞ்​சள் கயிற்​றில், திரு​மாங்​கல்​யம் அணிந்து வழி​பாடு செய்​தனர். மேலும் மயி​லாப்​பூர் கபாலிஸ்​வரர் கோயில் குளம் உள்​ளிட்ட பல கோயில் குளங்​களி​லும் மக்​கள் வழிபட்​டனர்.