Latest News
September 05, 2026 10:04 AM
குடிநீர் பைப்லைன் தகராறில் பஞ்., தலைவர் கொலை
வள்ளியூர்: குடிநீர் பைப்லைன் அமைப்பது தொடர்பான தகராறில், பஞ்., தலைவர் மகாராஜன், 55, செங்கலால் அடித்து கொல்லப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், கண்ணநல்லுார் ஊராட்சி தலைவரான மகாராஜன், தாமரைகுளத்தில் வசித்தார். அவரது வீட்டின் அருகே வசிக்கும் இசக்கியப்பன், 45, என்பவருக்கும், மகாராஜனுக்கும் குடிநீர் பைப்லைன் அமைப்பது தொடர்பாக, தகராறு ஏற்பட்டது.
அதில், இசக்கியப்பன் செங்கலால் தாக்கியதில் மகாராஜன் காயமடைந்தார். அவரை உறவினர்கள், நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே மகாராஜன் உயிரிழந்தார்.
வள்ளியூர் போலீசார், இசக்கியப்பனிடம், விசாரணை நடத்தி வருகின்றனர்.