📅 Thursday, 04 June 2026 IST | வைகாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News June 03, 2026 11:31 PM

குவைத் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்; இந்தியர் உயிரிழப்பு

குவைத் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்; இந்தியர் உயிரிழப்பு

குவைத்: குவைத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் ஈரானில் உள்ள கெய்ஷ்ம் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலை முறியடிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அமெரிக்கா கூறியது.

இந் நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி இருக்கிறது.

இந்த தாககுதலில் குவைத் சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இதில் ஒருவர் பலியாகி உள்ளார். விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு கடுமையாக சேதம் அடைந்துள்ளது என குவைத் அறிவித்துள்ளது.

சேதம் அடைந்த பகுதிகளை விமான நிலையத்தின் தொழில்நுட்பக் குழுவினர் ஆராய்ந்தனர். அதன் பின்னர் விமான நிலையத்தின் 4வது முனையத்தில் இருந்து மட்டும் விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஈரானின் இந்த தாக்குதல் காரணமாக வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் நிலவி வருகிறது.