கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாதாந்திர ஊதியம் ரூ.35,000-ஆக உயர்வு..!
தமிழக சட்டசடையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பதிலுரை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வாழ்க்கை என்பது தொடங்குகிறபோது சிலருக்கு வசந்தமாக துவங்கும். சிலருக்கு வசதியாக துவங்கும். ஆனால், எனக்கு வாழ்க்கை துவங்கியபோது வசந்தமும் இல்லை, வசதியும் இல்லை. வாழ்க்கை துவங்குகிறபோது நானே உருவாகி.. உருவாகி..
குட்டை குளங்களில், ஓடுகிற நதிகளில் என் ஆடைகளை துவைத்து, பஸ்ஸில் ஏறி பயணம் செய்து.. தினத்தந்தி பத்திரிக்கை வாங்கி தினமும் படித்து, சைக்கிளில் மிதித்த மிதித்து அரசியல் மீதான ஆசையால் இன்று சட்டமன்றத்திற்கு வருகை தந்திருக்கிற ஒரு அரசியல் தலைவர் நான்.
நாடாளுமன்றத்தில் பணியாற்றியபோது எனது ஆசை தமிழில் சரளமாக பேச முடியுமா..பேசலாமா.. எனக்கு தமிழில்பேச சரளமாக வருமா என்கிற ஏக்கம் என்னை வாட்டி எடுத்தது.
என்நெஞ்சுக்கு கிடைத்திருக்கிற சமூக நீதி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் நாளைய வருவால பிரதமர் ராகுல் காந்தி என்னை சட்டமன்றத்திற்கு அனுப்புகிற வாய்ப்பினை வழங்கி இருக்கிறார்.
நான் வாய்ப்புகளை மறுக்கப்பட்ட ஒருவன். நான் மறுக்கப்பட்டேன், நான் ஒதுக்கப்பட்டேன், எனக்கு வாய்ப்பு கொடுத்துதான் ஆக வேண்டும் என்று மேலிடத்திற்கு ஆடியோ ஒன்றை அனுப்பி வைத்தேன்.
அந்த ஆலய மணி என் தலைவனுக்குகேட்டது. மறுநாள் மேலூர் சட்டமன்ற பொது தொகுதியின் வேட்பாளராக ஆக்கப்பட்டேன்.
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல, 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கூட்டணி மந்திரி சபையில் இடம் கொடுத்த முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி. காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால கனவு, தமிழக அமைச்சரவையில் ஒரு நாளாவது இடம் பெறுமா என்று இருந்தது.
எம்ஜிஆர் ஆட்சி தொடங்கி, பல்வேறு காலகட்டங்களில் காங்கிரஸ் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை. திமுக 96 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தபோது, அமைச்சரவையில் இடம் கேட்டோம். முடியாது என்றார்கள். 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்று சொன்னார்கள்.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் மானியக் கோரிக்கைகள் குறித்து பேச வேண்டும். கட்சியைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால், எவ்வளவு நேரம் பேசுவார்?
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
உயர்கல்வித்துறையில் புதிய அறிவிப்புகள்
மாணவர்கள் உயர்கல்வி பெற ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும்.
6000 உதவிப் பேராசிரியர்கள் மூன்ற கட்டங்களாக நியமிக்கப்படுவர்.
கவுரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.35,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
NAAC அங்கீகாரம் பெற்ற தமிழ்நாட்டின் 10 அரசு கல்லூரிகள் தன்னாட்சி பெற்ற கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும்.
கலை அறிவியல் கல்லூரிகளில் தளவாடங்கள் வாங்குவதற்காக ரூ.36.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கென தனித்துவமான அறிவியில் மற்றும் தொழில்நுட்ப கொள்கை உருவாக்கப்படும்.
கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவுவதற்காக ஒரு தனிச்சட்டம் இயற்றப்படும்.
அரசு கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாய நிலம் இரண்டு ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள், அரசு கல்லூரிகள்/அரசு பல்கலைக் கழகங்களில் படிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முழு கல்விகட்டணம் விலக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.