கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!
கோபத்தில் எழும் அழுத்தத்தை அடக்க நினைப்பது, பிரஷர் குக்கரின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்த நினைப்பது போன்றது.
அரசியலில் முதுகில் குத்தினால் ஏற்படும் நன்மை என்ன?
- பத்மஜா, பண்பொழி.
தனியாகக் குத்தினால் தேர்தலில் சீட் கிடைக்கும். கூட்டமாகக் குத்தினால் அமைச்சரவையில்கூட இடம் கிடைக்கும்.
விஜய்யின் ஆட்சி ஆர்வக்கோளாறா?
- சி.ரகுமுருகன், விழுப்புரம்.
`ஆய்வு'க்கோளாறு!
கழுகாருக்கு ஏதோ ஒரு விருது கிடைப்பதாகக் கனவு கண்டேன். அது என்னவாக இருக்கும்?
- ரிஷிவந்தியா, தஞ்சாவூர்.
பறந்து போகும் நாடுகளிலெல்லாம் விருது வாங்க நான் என்ன பிரதமர் மோடியா?
`இது’ நடந்தால், `அதை’ உலக அதிசயங்களில் ஒன்றாகச் சேர்த்துக்கொள்ளலாம் என்று `எதை’ச் சொல்வீர்கள்?
- ஜத்துஜஸ்ரா, கொடைக்கானல்.
பிரதமர், முதல்வர் பிரஸ் மீட்!
மதில்மேல் பூனைகள்?
- ஜெ. மாணிக்ஸ், இடைப்பாடி.
இதழ் அச்சேறும்வரையில் 3 பூனைகள் த.வெ.க-வுக்கு தாவியிருக்கின்றன.
சமீப நாள்களில் கழுகார் ரசிக்கும் நகைச்சுவைக் காட்சிகள்?
- கமலக்கண்ணன், திருச்சி.
தி.மு.க மற்றும் அதன் முன்னாள் கூட்டணிக் கட்சியினரின் சமூக வலைதளப் பதிவுகளைப் படிப்பதைவிட, சிறந்த நகைச்சுவை அனுபவம் எங்கே கிடைக்கப்போகிறது?!
ஜெயக்குமார்?
- நாகமுத்து, எப்போதும் வென்றான்.
அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறாராம்!
தமிழக மந்திரிசபை ஒரு கதம்பமாகிவிட்டதே?
- லீலாராம், தக்கலை.
முதல்வர் விஜய் ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால், `ஒட்டுப்போட்ட' கதம்பம்!
``பதவிக்கு ஆசைப்பட்டு ஆதரவு கொடுக்கவில்லை; அ.தி.மு.க-விலே பிளவு இல்லை, வெறும் கருத்து வேறுபாடு'' என்ற எஸ்.பி.வேலுமணியின் பேட்டி?
- வண்ணை கணேசன், கொளத்தூர்.
``ஆடு திருடு போகலை; ஆடு திருடு போன மாதிரி கனவு கண்டேன்'' என்ற காமெடி காட்சிதான் நினைவுக்கு வருகிறது.
மாபெரும் தோல்வியிலும் பா.ஜ.க அமைதி காத்துவருவது எதற்காக?
- `நவோதயா' செந்தில், காரைக்கால்.
தமிழிசை சௌந்தரராஜன் சொல்வதுபோல், இந்தத் தேர்தல் பா.ஜ.க-வுக்கு ஒரு `வெற்றிகரமான தோல்வி.’ எது வெற்றி, எது தோல்வி என்பவை போகப் போகத் தெரியும்.
பல்டி, அந்தர் பல்டி... என்ன வித்தியாசம்?
- மாணிக்ப்ரபா, சேலம்.
பல்டி - போன வாரம் வேலுமணி, அந்தர் பல்டி - இந்த வாரம் வேலுமணி.
``தி.மு.க எந்த நிலைமையையும் சமாளிக்கும்'' என்கிறாரே வைகோ?
- வி.வெங்கடேசன், ஏனங்குடி.
உண்மைதான். வாழ்நாள் எதிரியான அ.தி.மு.க-வோடு கூட்டணிவைக்கும் நிலைமையையே சமாளித்துவிடலாம் என்று நினைத்திருக்கிறார்களே!
சமத்துவ மக்கள் கட்சி ஆட்சி அமைத்திருந்து, சரத்குமார் முதல்வராகியிருந்தால்?
சரத்குமாரின் மாமியாருக்குக் கிடைத்த வெற்றியாக அது இருந்திருக்கும்.
கூட்டணிக் கட்சிகளை மதிக்கத் தவறினால் என்ன நடக்கும்?
- `போயஸ் கார்டன்’ பொன்விழி, அன்னூர்.
இந்தக் கேள்விக்கான விடை கிடைக்கும் இடம் - அண்ணா அறிவாலயம், தேனாம்பேட்டை, சென்னை - 600 018.
ஏன் ‘குதிரைப் பேரம்’ என்று வந்தது... ஒரு யானையையோ, மாட்டையோ, கழுதையையோ சொல்லியிருக்கலாமே? (பரிசு ரூ.250)
- டீ.என்.பாலகிருஷ்ணன், மடிப்பாக்கம்.
‘`யானை விழுந்தால் எழ நேரம் ஆகும்; ஆனால், குதிரை ‘டக்’ என எழுந்துவிடும்’’ என்று நடிகர் ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறார். அப்படி ‘டக்’ என எழுந்து, ஒவ்வொரு ரிசார்ட்டுக்கும் குதித்தும் தாவியும் ஓட வேண்டும் என்பதால்தான் குதிரையோடு ஒப்பிடுகிறார்கள்போல!
அ.தி.மு.க பொதுக்குழு கூடினால் அங்கே என்ன நடக்கும்?
- முகமது ஆதில், சென்னை.
பாட்டில் பறக்கும்!
`தமிழகத்தில் ரிசார்ட் அரசியல் செய்யாத ஒரே இயக்கம் தி.மு.க-தான்' என்கிறாரே உதயநிதி?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
அப்படியென்றால், `தி.மு.க-வுக்கு பயந்துதான் மற்ற கட்சிகள் எம்.எல்.ஏ-க்களை ரிசார்ட்டில் பதுக்கிவைக்கிறார்கள்' என மறைமுகமாகச் சொல்கிறாரா உதயநிதி?!
‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்... இவன் ரொம்ப நல்லவன்...' என்ற வசனப்படி அரசியலில் யார் அந்த நல்லவர்?
- ஜெ.மாணிக்ஸ், இடைப்பாடி.
தேர்தல் முடிவுகளைவைத்துப் பார்க்கும்போது சீமான்தான் அந்த நல்லவர்!
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி?
- கோவிந்தன், சென்னை-17.
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!