📅 Thursday, 04 June 2026 IST | வைகாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business June 01, 2026 08:30 AM

ரூ. 46 உயர்ந்த வணிக சிலிண்டர் விலை; பெட்ரோல், டீசல் விலையும் உயர்வு

ரூ. 46 உயர்ந்த வணிக சிலிண்டர் விலை; பெட்ரோல், டீசல் விலையும் உயர்வு

ரூ. 46 உயர்ந்த வணிக சிலிண்டர் விலை; பெட்ரோல், டீசல் விலையும் உயர்வு

வீட்டு சிலிண்டர் விலையில் இன்று மாற்றம் இல்லை என்றாலும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை இன்று ரூ. 46 உயர்ந்து, ரூ. 3283க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Published : June 1, 2026 at 7:39 AM IST

சென்னை: கடந்த மாதத்தில் பெட்ரோல், டீசல் விலையானது 6 முறை உயர்ந்து, இரண்டு முறை குறைந்த நிலையில் இந்த மாத தொடக்கத்திலேயே அதிகரித்திருக்கிறது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது.

கடைசியாக, மே 29ஆம் தேதி பெட்ரோலுக்கு 24 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 108.01க்கும், டீசலுக்கு 23 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.99.78க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 30ஆம் தேதி பெட்ரோலுக்கு 24 பைசாவும், டீசலுக்கு 23 பைசாவும் குறைந்தது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை 11 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 107.87க்கும், டீசல் விலை 10 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 99.65க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இறக்குமதி சுமையை சமாளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டிற்கு பிறகு எரிபொருள் விலையில் பெரிதளவில் மாற்றம் கொண்டுவரப்படாமல் இருந்த நிலையில், தற்போதைய நிலைமையை சமாளிக்க விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த மே 15ஆம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலையானது ஓரிரு நாட்களுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு வருகிறது. மேற்காசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது ரூ. 15 வரை அதிகரிக்கக் கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ள நிலையில் தற்போது வரை கிட்டத்தட்ட ரூ. 8 உயர்ந்திருக்கிறது. தட்டுப்பாடு அதிகமாகும் பட்சத்தில் இந்த விலையானது மடமடவென உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மே 15ஆம் தேதியிலிருந்து மாத இறுதிக்குள் 6 முறை விலை உயர்ந்த நிலையில் 2 முறை குறைந்திருக்கிறது. இருப்பினும், ஜூன் மாதத்தின் முதல் நாளான இன்று சற்று விலை உயர்ந்திருக்கிறது.

தொடர்ந்து உயரும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை

வீட்டு சிலிண்டர் விலையில் இன்று மாற்றம் இல்லை என்றாலும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதன்படி, இன்று ரூ. 46 உயர்ந்து, ரூ. 3283க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாதந்தோறும், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப வீட்டு உபயோகக் கேஸ் சிலிண்டர் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை இந்தியாவில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலையில், மேற்காசியாவில் போர் சூழல் தணியாததால் இந்த மாதமும் உயர்ந்திருக்கிறது. எரிபொருள் விலை தொடர் உயர்வை சந்தித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், ஏழை, எளிய மக்கள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.