பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு; ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.108.01 ஆக உயர்வு
சென்னை: கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலியாக இன்று (மே 29) பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.108க்கும், டீசல் விலை லிட்டருக்கு 23 பைசா உயர்ந்து ரூ.99.78க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நம் நாட்டில் பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், டீலர்கள் வாயிலாக பெட்ரோல், டீசல் விற்கின்றன.மேற்காசிய நாடுகளில், கடந்த மார்ச்சில் ஏற்பட்ட போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன், விலை மிகவும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று (மே 29) பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.108க்கும், டீசல் விலை லிட்டருக்கு 23 பைசா உயர்ந்து ரூ.99.78க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தொடர்ந்து நஷ்டத்தை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.