📅 Thursday, 04 June 2026 IST | வைகாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business June 01, 2026 08:31 AM

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.46 உயர்வு

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.46 உயர்வு

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.46 உயர்வு

சென்னை: சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.46 உயர்ந்து 3,283க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை

அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து கச்சா எண்ணெய், சமையல் கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. போரின் உச்சமாக, வளைகுடா நாடுகளில் இருந்து செல்லக்கூடிய கப்பல்கள் கடக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடியதில் இருந்து பிரச்சினை இன்னும் தலைவிரித்தாடி வருகிறது. தட்டுப்பாட்டை சமாளிக்க வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் (19 கிலோ) விநியோகத்தை முதலில் குறைத்தது. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டரை (14.2 கிலோ) தடையில்லாமல் விநியோகம் செய்து வருவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. இருப்பினும், பல மாநிலங்களில் தட்டுப்பாடு நிலவுகிறது.

தற்போது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது சற்று அதிகரித்தாலும், இன்னும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் விலையும் உயர்த்தப்படுகிறது. இப்படி இருக்கும் சூழலில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடந்த மாதம் 990 ரூபாய் 50 காசு உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அதிர்ச்சி கொடுத்தன.

இதன்படி ஒரு சிலிண்டர் விலை ரூ.3 ஆயிரத்து 237-க்கு விற்பனையாகி வந்தது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்யும். அந்த வகையில் இன்றும் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.46 உயர்ந்து ரூ.3,283 ஆக உயர்ந்துள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.928.50 ஆக விற்பனையாகிறது.

\n ${e.display_status||e.scheduleTime}\n

\n ${e.display_status+", "+e.scheduleTime}\n