📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 11, 2026 05:33 AM

 மாநகராட்சி அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

 மாநகராட்சி அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

சென்னை: தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர், சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் வாயிலாக ஊதியம், ஓய்வூதியங்களை வழங்க வேண்டும்.

கலந்தாய்வு வாயிலாக பணியிட மாறுதல்கள், பதவி உயர்வு மாற்றங்கள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட, 6 அம்ச கோரிக்கைகளை, இச்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக, தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்கத்தினர், ஏற்கனவே மாவட்டங்கள் அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் தலைமை அலுவலகத்தில், சங்கத்தின் மாநில செயலர் முருகானந்தம் தலைமையில், நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு தரப்பில் நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பேச்சு நடத்தினார். தொடர்ந்து, பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக, அவர் உறுதி அளித்தார்.