📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 11, 2026 06:33 AM

பெண் ஜிஎஸ்டி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஜிஎஸ்டி ஆய்வாளர் கைது

பெண் ஜிஎஸ்டி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஜிஎஸ்டி ஆய்வாளர் கைது

பெண் ஜிஎஸ்டி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஜிஎஸ்டி ஆய்வாளர் கைது

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் 2வது பிரதான சாலையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆய்வாளராக பெண் பணியாற்றி வருகிறார்.‌ இதே அலுவலகத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சவுரவ் (28) என்பவரும் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆய்வாளர் சவுரவ், தன்னுடன் பணியாற்றி வரும் பெண் ஆய்வாளருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துவந்துள்ளார். அடிக்கடி இரட்டை அர்த்தத்தில் பேசி டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக, பெண் ஜிஎஸ்டி ஆய்வாளரின் புகைப்படங்களை திருடி அதனை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியது, உயர் அதிகாரிகளோடு இணைத்து காதலுக்கு வயது தடையில்லை என்பதுபோன்ற வாசகங்களை இணைத்து பதிவிடுவது என தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஜிஎஸ்டி ஆய்வாளர் புகார் அளித்தார். அதன்பேரில், மகளிர் போலீசார் விசாரித்து, சவுரவ் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சவுரவை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.