📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 08, 2026 07:33 AM

மேகதாது அணை பிரச்னைக்கு புதிய நடுவர்மன்றம் தேவையில்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு

மேகதாது அணை பிரச்னைக்கு புதிய நடுவர்மன்றம் தேவையில்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு

மேகதாது அணை பிரச்னைக்கு புதிய நடுவர்மன்றம் தேவையில்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை:சட்டசபையில் மேகதாது அணை பிரச்னை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில் புதிய நடுவர்மன்றம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நாங்கள் ஏற்கவில்லலை. தமிழ்நாட்டிலும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும். விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும். கர்நாடக அரசு குறித்த காலத்தில் தண்ணீரை திறந்து விட்டிருந்தால் விவசாயிகள் குருவை சாகுபடி செய்திருப்பார்கள். கிணற்று தண்ணீரை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்தார்கள். அதில் ஒரு லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசமாகி உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் அதிகாரிகளை அனுப்பி அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.