📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema May 27, 2026 02:21 PM

மேகதாது வழக்கு: தமிழக மறுஆய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் நிராகரிப்பு

மேகதாது வழக்கு: தமிழக மறுஆய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் நிராகரிப்பு

புதுடெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேகதாது அணை திட்​டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, உச்ச நீதி​மன்​றத்தை அணுகியது. ஆனால், அம்மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மறு ஆய்வு மனுவின் உள்ளடக்கங்களையும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களையும் கவனமாகப் பரிசீலித்த பிறகு, அதை ஆய்வு செய்யத் தேவையான முகாந்திரம் ஏதும் இல்லை என்பதில் மனநிறைவு அடைவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக திறந்த நீதிமன்ற விசாரணைக்கான கோரிக்கையையும் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

தமிழக-கர்நாடக அரசியலுக்கு இடையே மேகதாது அணை தொடர்பாக நீண்டகாலப் பிரச்சினை இருந்து வருகிறது. மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக்கூடாது என்பது தமிழகத்தின் கோரிக்கை. கர்நாடக அரசு இதை ஏற்க மறுத்துவிட்டது.

இந்நிலையில், மேகதாது அணை திட்​டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கு இந்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு மட்டுமன்றி, தேசியத் தென்​னிந்​திய நதி​கள் இணைப்பு விவ​சா​யிகள் சங்​கத் தலை​வர் அய்​யாக்​கண்ணு தரப்​பும் உச்ச நீதி​மன்​றத்தை அணுகியுள்ளன.

இதனிடையே, மேகதாது அணை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக மாநிலத் துணை முதல்வர் டி.கே. சிவகுமார், காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்றும் தமிழக அரசு இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதுகுறித்து கவலை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

டி.கே. சிவகுமாரின் இந்தக் கருத்துக்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், காவிரி விவகாரம் குறித்து கர்நாடகத் துணை முதல்வர் சிவகுமார் பொதுவெளியில் கருத்து தெரிவிப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தமிழகத்தின் நலன் காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

“காவிரி படுகையில் உள்ள மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமல் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இத்தீர்ப்பை எந்த வகையிலும் கர்நாடகா மீறக்கூடாது என அம்மாநில அரசுக்குப் பிரதமர் அறிவுறுத்த வேண்டும்,” என விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.