📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 15, 2026 03:31 AM

"மேடையில் இருந்து இறங்கி முதல்வர் செய்த செயல்".. மருத்துவ கட்டிடம் முதல் App வரை" ஒரே நாளில் 2,144 பேருக்கு வேலை!

"மேடையில் இருந்து இறங்கி முதல்வர் செய்த செயல்".. மருத்துவ கட்டிடம் முதல் App வரை" ஒரே நாளில் 2,144 பேருக்கு வேலை!

சென்னை மாநில கல்லூரியில், 751 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளையும்,சுகாதார ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்ட 1,393 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் இன்று வழங்கினார் முதல்வர் விஜய். இது மட்டுமின்றி ரூ. 139. 47 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டடங்கள் மற்றும் நவீன உபகரணங்களை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்.

இது மட்டுமின்றி நலம் TN திட்டத்திற்கான இணையத்தளத்தினையும் முதல்வர் துவக்கிவைத்தார். 38 மாவட்டங்களில் உள்ள அணைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயர் சிறப்பு சிகிச்சை வழங்குவதற்காக, உட்கட்டமைப்பு மற்றும் உயர்தர மருத்துவ உபகரணங்களை மேம்படுத்தும் நோக்கில் பெரிய தொழில் நிறுவனங்கள், சமூக மற்றும் பெருநிறுவனங்களின் பங்களிப்பு நிதி, தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் ஆகியோரிடமிருந்து நன்கொடைகளை பெற்று வெளிப்படைத்தன்மையோடு நலன் தமிழ்நாடு அமைப்பு, தமிழ்நாடு சுகாதார கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்வின்போது நலன் தமிழ்நாடு காணொளியை நிகழ்வின்போது வெளிட்டார் முதல்வர் விஜய். மேலும், சமூக மற்றும் பெருநிறுவனங்களின் பங்களிப்பு நிதி அரசு மருத்துவமனைக்கு வழங்குவதாகவும்,பல்வேறு நிறுவங்கள் காசோலைகளை முதல்வரிடம் வழங்கினர். மேலும், சென்னை கண்ணதாசன் நகரை சேர்ந்த சத்யா என்ற பெண் 2 ஆண்டுகளுக்கு முன்பு எக்மோர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அப்போது அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்களும், செவிலியர்களும் தாயையும், சேயையும் குடும்ப உறுப்பினர்களைப்போன்று பார்த்துக்கொண்டதன் நினைவாக சத்யா ரூ.1000 பணத்தை QR Code மூலம் முதல்வரிடம் வழங்கினார்.

இதனையடுத்து மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய நிலையில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில், டாக்டர். பிரஷாந்திக்கு பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் மேடையில் இருந்து கீழிறங்கிய சென்று வாழ்த்துக்கள் கூறி வழங்கினார். அதன் பின்னர் பணி நியமன ஆணை அனைவருக்கு வழங்கப்பட்டது. மேலும், மருத்துவ ஆணைகளை பெற்றுக்கொண்ட மருத்துவர்கள் மத்தியில் செல்ஃபியும் முதல்வர் விஜய் எடுத்துக்கொண்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்