📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 19, 2026 11:03 PM

 மேட்டூர் அணை விரைவில் திறக்கப்படும்!

 மேட்டூர் அணை விரைவில் திறக்கப்படும்!

சென்னை: ''மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், விரைவில் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

* அ.தி.மு.க., சேகர்: ராஜவாய்க்காலில் தண்ணீர் இல்லாததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உண்ணாவிரத போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பல இடங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக தான் வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 15 நாட்கள் அடிப்படையிலாவது தண்ணீர் திறக்க வேண்டும்.

அமைச்சர் ஆனந்த்: சேலம், மேட்டூர் அணையில், 82.7 அடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வரும் 26க்குள், 9 டி.எம்.சி., தண்ணீர் வரும் என எதிர்பார்க்கிறோம். முதல்வர் மற்றும் துறை அதிகாரிகளுடன் பேசி, விரைவில் நீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் வடகிழக்கு பருவ மழை முன்னிட்டு, நீர்நிலைகள் துார்வாரும் பணி, 42 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. மாநிலம் உள்ள நீர்நிலைகள் புனரமைப்புக்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், ரோட்டரி கிளப் வாயிலாக, 700 ஏரி, குளங்கள் துார் வாரப்படுகின்றன.

இவ்வாறு விவாதம் நடந்தது.