📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 15, 2026 09:34 PM

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக நேற்றும் (14/07/2026) விலை குறைந்து காணப்பட்டது. அதன் படி நேற்று கிராமுக்கு ரூ 50ம் குறைந்து ஒரு கிராம் ரூ 13,150க்கும் , ஒரு சவரன் ரூ 400ம் குறைந்து , ரூ 1,05,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 240 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,05,440க்கும், கிராமுக்கு ரூ 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ 13,180 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையை போலவே வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ 5ம் உயர்ந்து கிராம் ரூ 240க்கும் ,ஒரு கிலோ வெள்ளி ரூ 5000 உயர்ந்து ஒரு கிலோ ரூ 2,40,000 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.