📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 18, 2026 04:34 PM

மிஸ்டர் கழுகு: குழப்பத்துக்கு மேல் குழப்பம்... வெளிச்சம் தேடுகிறாரா திருமா?

மிஸ்டர் கழுகு: குழப்பத்துக்கு மேல் குழப்பம்... வெளிச்சம் தேடுகிறாரா திருமா?

மிஸ்டர் கழுகு: குழப்பத்துக்கு மேல் குழப்பம்... வெளிச்சம் தேடுகிறாரா திருமா?

‘ஆகஸ்ட் 17-ம் தேதி தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. அதற்காக தினம் தினம் எதையாவது பேசி, வெளிச்சம் தேடிக் கொள்கிறார் திருமா’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்

“நான் ரொம்ப ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு” என்று சொன்னபடியே அலுவலகத்துக்குள் நுழைந்தார் கழுகார். “கோட்டைக்குப் போய்விட்டு வந்திருக்கிறீர் என்று புரிகிறது. அமைச்சரவைக் கூட்டம், அதிகாரிகள் மாற்றம் எனக் கோட்டையே பரபரக்கிறதே...” என்றபடி, கழுகாருக்கு, சூடான சமோசாக்களை நீட்டினோம். அவற்றைச் சுவைத்தபடியே செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

“ஜூலை 16-ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அதிகாரிகளையெல்லாம் சில நிமிடங்கள் வெளியே அனுப்பிவிட்டு, அமைச்சர்களை வெளுத்து வாங்கி விட்டாராம் முதல்வர் விஜய். ‘லஞ்சம், ஊழல் என ஏதாவது புகார் வந்தால், பொறுத்துக்க மாட்டேன். யாரா இருந்தாலும், அவங்க எவ்வளவு பெரிய பொறுப்புல இருந்தாலும் அமைச்சர் பதவியில இருந்து தூக்கி வீசிடுவேன்...’ என்று கறாராகக் கூற, அரங்கே நிசப்தமாகியிருக்கிறது.”

“சிலரைக் குறிப்பிட்டு, ‘ `பள்ளிக்கு ஆய்வு செல்கிறேன்’, `மருத்துவமனை ஆய்வுக்குப் போகிறேன்’ என்கிற வேலையே இனி இருக்கக் கூடாது. உங்க டிபார்ட்மென்ட் வேலையில முதல்ல கவனம் செலுத்துங்க. பட்ஜெட் விவாதத்துக்கு பதிலளிக்க தயாராகுங்க. உத்தரவை மீறி யாராவது நடந்தா, விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று கண் சிவந்திருக்கிறார் முதல்வர்.”

“அப்படியென்றால் அமைச்சரவை மாற்றம் நடக்கப்போகிறதெனச் சொல்லும்!”

“சர்ச்சையிலும் ஊழல் புகாரிலும் சிக்கும் அமைச்சர்களை முதல்வர் நிச்சயம் தூக்கியெறிவார் என்கிறார்கள் விவரப்புள்ளிகள். கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு மட்டும், ‘எனக்கு வேறு துறையைக் கொடுங்கள். இந்தத் துறையை எளிதாகக் கையாள முடியவில்லை’ என முதல்வரிடம் பேச முடிவெடுத்திருக்கிறாராம். இந்தச் சூழலில், ‘மகிழ்ச்சி’ மாண்புமிகு ரூட்டில் அமைச்சரவையில் இடம்பெறவும், கனிம வளத்துறையை வசப்படுத்தவும் துடிக்கிறாராம் நெல்லை மாவட்ட எம்.எல்.ஏ ஒருவர். ஆனால் யார், என்ன நினைத்தாலும், முதல்வர் நினைப்பதுதான் நடக்கும் என்பதற்கு சமீபத்திய அதிகாரிகள் பணியிட மாற்றமே சாட்சி.”

“அதிகாரிகள் பணியிட மாற்றத்தில் அப்படியென்ன சுவாரஸ்யம்?”

“இதுநாள் வரையில் நடந்த பணியிட மாற்றங்கள், பவர் சென்டர்களின் சிபாரிசுகளில் செய்யப்பட்டவையாம். ஆனால், சமீபத்தில் நடந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம், முதல்வரின் நேரடி உத்தரவுதானாம். சுப்ரியா சாஹு, உமாநாத்,

ஜெ.ராதாகிருஷ்ணன், வள்ளலார், பாஸ்கர பாண்டியன், பூஜா குல்கர்னி எனப் பல சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் டம்மியான பொறுப்புகளில் போட்டிருக் கிறார்கள். வியாசர்பாடியில், மின்சாரப் பேருந்து இயக்க விழாவில், முதல்வர் கேட்ட கேள்விக்குச் சரியாக பதிலளிக்காத காரணத்தால், வள்ளலார் பந்தாடப் பட்டிருக்கிறார். பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் கட்டடம் கட்ட அனுமதியளித்த விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவின் தொடர்புகளை விசாரிக்க விருப்பதால், சுற்றுச்சூழல் துறையில் இருந்த சுப்ரியா சாஹுவை மாற்றியிருக்கிறார்கள்.”

“தலைமைச் செயலாளர் சாய்குமாரும், முதல்வரின் தனிச் செயலாளர் செந்தில்குமாரும் சேர்ந்துதான் டிரான்ஸ்ஃபருக்கான உத்தரவுகளைத் தயார் செய்திருக்கிறார்கள். முதல்வருக்கு ஆலோசகராக இருக்கும் விஷ்ணு ரெட்டிக்கு மட்டுமே, டிரான்ஸ்ஃபருக்கு முன்பாகத் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. மற்ற பவர் சென்டர்களுக்கெல்லாம் டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்த பின்னர்தான் விவரம் தெரிந்திருக்கிறது. நிர்வாகச் சூட்சுமங்களை முதல்வர் வசப்படுத்த ஆரம்பித்துவிட்டார்.”

“வி.சி.க தலைவர் திருமாவளவனின் பேச்சால், அவருடைய கட்சியினரே கடும் அப்செட்டாகிவிட்டார்களாமே?” என்ற கேள்வியைக் கேட்டு முதல்வரை அடுத்த செய்திக்குத் திருப்பினோம்.

“உண்மைதான். சமீப நாள்களாக அவரது பேச்சு குழப்பத்துக்கு மேல் குழப்பமாக இருக்கிறது. தேர்தலின்போது, காட்டுமன்னார்கோயில் தொகுதியில் களமிறங்குவதாக அறிவித்துவிட்டு, பிறகு பின்வாங்கினார் திருமா. அதற்கு விளக்கமளித்தபோது, ‘இது என்னுடைய முடிவு. எனக்குக் கட்டளையிட எவராலும் முடியாது’ என்றார். ஆனால் இப்போது, ‘நான் ஏன் போட்டியிடவில்லை என தி.மு.க-விடம் கேளுங்கள்’ என்றார். ஆதிதிராவிடர் நலத்துறையை, `சமூக நீதித்துறை’ எனப் பெயர் மாற்றியதை அமைச்சர் வன்னியரசு வரவேற்ற நிலையில், ‘ஆதிதிராவிடர் நலத்துறை என்றே இருக்க வேண்டும்’ என்கிறார் திருமா.”

“ஏன் இப்படிக் குழப்புகிறார்?”

“இன்னும் இருக்கிறது கேளும். ‘த.வெ.க அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறோம். ஆனால், த.வெ.க கூட்டணியில் இல்லை. தி.மு.க கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேறவில்லை’ என்று பேசினார். சில நாள்கள் கழித்து, ‘பனையூர் பாபுவை இணைத்துக்கொண்டு எங்களை வெளியேற்றிவிட்டது தி.மு.க’ என்றார். பின்னர், ‘பா.ஜ.க-வை வீழ்த்த தி.மு.க-வும் த.வெ.க-வும் `இந்தியா’ கூட்டணியில் ஒன்றாக இருக்க வேண்டும்’ என்கிறார்.”

“ஷ்ஷ்... யப்பா... கண்ணைக் கட்டுதே...”

“இதற்கே அசந்தால் எப்படி... ‘அமித் ஷா எனக்கு போனில் பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்தார். கொள்கை அரசியல் வேறு, தனிமனித உறவு வேறு’ எனச் சிலாகிக்கும் திருமா, ‘சீமானும் ஸ்டாலினும் ஒரே மேடையில் கொஞ்சிக் குலாவுகிறார்கள்’ என விமர்சிக்கிறார். தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துவிட்டன. ஆனால், இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், ‘எந்தக் கூட்டணியில் இருக்கிறோம்’ என்பதைத் தெளிவு படுத்தாமலேயே இருக்கிறார் திருமா. அதுதான், வி.சி.க-வினரை அப்செட்டாக்கியிருக்கிறது.”

“ஏன் இப்படி நடந்துகொள்கிறாராம்?”

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியது, சென்னை உயர் நீதிமன்றம். அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது, முந்தைய தி.மு.க அரசு. இந்தச் சுழலில், அந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கும் த.வெ.க அரசு, மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற முன்வந்திருக்கிறது. எனவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சி.பி.ஐ வசமாவது உறுதியாகிவிட்டது. வழக்கை சி.பி.ஐ தோண்ட ஆரம்பித்தால், சூரியக் கட்சியின் தலைநகர் மாஜி ஒருவரும், கதர்க் கட்சி முக்கியப் புள்ளியும் விசாரணை வளையத்துக்குள் வர வாய்ப்பிருக்கிறது. மேலும், இந்த வழக்கு தொடர்புடைய இரண்டு ரௌடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். அதனால், சென்னை காவல்துறையின் உச்சப்புள்ளியாக இருந்த காவல் அதிகாரிக்கும் பிரச்னை காத்திருக்கிறதாம்.”

“முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் ஏதோ பிரச்னை காத்திருக்கிறதாமே?”

“அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் பலருமே அவரது தொகுதியான தொண்டாமுத்தூரைச் சேர்ந்தவர்கள். இந்த விவகாரம் நீதிமன்றப் படியேறவும், சமீபத்தில் நியமனங்களை ரத்துசெய்துவிட்டது நீதிமன்றம். அதைவைத்து, வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு பதிய ஆயத்தமாகியிருக்கிறதாம் த.வெ.க அரசு. ஊழல் ஒழிப்புக்காக இதைச் செய்கிறார்கள் எனத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். வேலுமணியைத் தங்கள் கன்ட்ரோலில் வைத்திருக்கவே இந்த வழக்கு அஸ்திரத்தைக் கையில் எடுக்கப் போகிறார்களாம்.”

“ `உமித்’ என்பது வக்பு வாரியத்தின் சொத்துகளை நிர்வகிப்பதற்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய இணையதள போர்ட்டல். அதை நிர்வகிக்கும் வக்பு வாரிய கமிட்டியில் முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், தமிழக வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவரை உறுப்பினராகச் சேர்க்கவில்லை. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறார்களாம், முஸ்லிம் பிரமுகர்கள் சிலர். இதனால், அமைச்சர் ஷாஜஹானுக்கும், வாரியத் தலைவர் நவாஸ் கனிக்கும் சிக்கல் ஏற்படும் என்கிறது கோட்டை வட்டாரத் தகவல்” என்றுவிட்டு, கிளம்பும் மூடுக்கு வந்த கழுகார்,

“முதல்வரை, கோட்டையில் சந்தித்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, போதை ஒழிப்பு தொடர்பான கேரளாவின் ‘ஆபரேஷன் டூஃபான்’ குறித்து விவரித்திருக்கிறார். கோவை, தேனி வழியாகக் கேரளாவுக்குள் கடத்தப்படும் போதை வஸ்துகள் தொடர்பாகவும், கடல் மார்க்கமாகக் கடத்தப்படும் போதைப்பொருள்கள் தொடர்பாகவும் விளக்கியிருக்கிறார். கேரளாவுடன் இணைந்து போதைப் பொருள் கடத்தல் நெட்வொர்க்கை சுக்கு நூறாக்க, டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வாலுக்கும், அமலாக்கப் பிரிவு

ஏ.டி.ஜி.பி சங்கருக்கும் உத்தரவிட்டிருக் கிறாராம் முதல்வர் விஜய். அவர்கள் என்ன செய்கிறார்கள் எனப் பார்ப்போம்...” என்று சொல்லிவிட்டு ஜூட் விட்டார் கழுகார்.