📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu November 28, 2026 08:32 PM

மக்கள் ஒற்றுமை ஊர்வலம்

மக்கள் ஒற்றுமை ஊர்வலம்

விழுப்புரம்: திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பை கண்டித்து இடதுசாரிகள் சார்பில் விழுப்புரத்தில் ஊர்வலம் நடந்தது.

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் துவங்கிய ஊர்வலம் திருச்சி நெடுஞ்சாலை வழியாக புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலை அடைந்தது. அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட செயலாளர் கண்ணப்பன் தலைமை தாங்கினார். மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் கீதா, மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமரன், சங்கரன், மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இடைக்குழு செயலாளர்கள் ராஜிவ்காந்தி, சிவக்குமார், உலகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் இந்திய கம்யூ., மாவட்ட துணைச் செயலாளர்கள் கலியமூர்த்தி, முருகன், பாலசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.