📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 02, 2026 02:33 AM

மன்னிக்க முடியாத தவறை செய்துள்ளார் பிரபுதேவா

மன்னிக்க முடியாத தவறை செய்துள்ளார் பிரபுதேவா

பிரபுதேவா போன்ற ஒரு புகழ்பெற்ற நடன கலைஞர் இப்படி மன்னிக்க முடியாத தவறை செய்வார் என நான் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை.

சென்னை நாரத கானா சபாவில் குரு ஸ்ரீ உடுப்பி லட்சுமி நாராயணன் 100-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பிரபுதேவா தனது குருவிற்கு மரியாதை செலுத்தும் விதத்தில் பரதநாட்டியம் ஆடினார்.

சமூக ஊடகங்களில் இந்த நடன வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், இதற்கு நடனக் கலைஞரும் நடிகையுமான ப்ரீத்தி சஞ்சீவ் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து ப்ரீத்தி சஞ்சீவ் வெளியிட்டுள்ள பதிவில், பாரம்பரிய கலைகள் தவறாகக் கையாளப்படுவது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பாரம்பரிய கலைக்கு இழைக்கப்படும் அநீதி

இந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்ததற்கு பதிலாக பரதநாட்டியத்தில் நன்கு பயிற்சி பெற்ற ஒரு இளம் நடன கலைஞருக்கு கொடுத்திருக்கலாம். அது வளர்ந்து வரும் ஒரு கலைஞனுக்கு அர்த்தமுள்ள அங்கீகாரமாக இருந்திருக்கும் என பிரீத்தி சஞ்சீவ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.