மது பாட்டிலுக்கு ரூ.20 உயர்கிறதா..? சட்டசபையில் மசோதா தாக்கல்
மதுபானங்கள் மீது ‘சுற்றுச் சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை’ என்ற புதிய வரியை விதிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மதுப்பழக்க மீட்புத் திட்டங்களுக்கு இந்த வரி பயன்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில், 'டாஸ்மாக்' கடைகள் வாயிலாக, மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் விற்பனைக்கு பின் காலி மது பாட்டில்களை மறுசுழற்சி செய்வதில் பிரச்னை எழுகிறது. இதை கட்டுப்படுத்த புதிதாக வரி விதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில் ஒன்றுக்கு, 20 ரூபாய்க்கு மிகாமல், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மதிப்புக்கூட்டு வரி சட்டத்தில் திருத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளது. இதற்காக, மதிப்புக்கூட்டு வரி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா சட்ட சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
மறு சுழற்சி முறை
வன விலங்குகள் பாதுகாத்தல்
முன்னதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அளித்த விளக்க உரையில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.