📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 26, 2026 06:33 AM

மு.க.அழகிரி மகள் கயல்விழி மீது எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் காவல்துறையில் தாக்குதல் புகார்

மு.க.அழகிரி மகள் கயல்விழி மீது எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் காவல்துறையில் தாக்குதல் புகார்

மு.க.அழகிரி மகள் கயல்விழி மீது எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் காவல்துறையில் தாக்குதல் புகார் - பின்னணி என்ன?

ஆத்திரமடைந்த கயல்விழி அழகிரி, வங்கிக் கிளைக்கு நேரில் வந்து கிளை மேலாளரை ஆபாசமாக திட்டியதுடன், அவரை தாக்கி, மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அடையாறு எஸ்.பி.ஐ என்.ஆர்.ஐ கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங் மீது கட்டட உரிமையாளரான கயல்விழி அழகிரி தாக்குதல் நடத்தியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ ரீஜினல் பிசினஸ் ஆபீஸ் (RBO-II) தலைமை மேலாளர் நமச்சிவாயம் கடந்த ஜூலை 21-ஆம் தேதி அளித்துள்ள புகாரில் இந்தக் குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளது.

புகாரின்படி, அடையாறு எஸ்.பி.ஐ என்.ஆர்.ஐ கிளை செயல்பட்டு வரும் கட்டடத்தில் உள்ள லிஃப்ட் பழுதடைந்திருந்ததாகவும், அதை சரிசெய்யுமாறு கட்டட உரிமையாளர் கயல்விழி அழகிரியின் பிரதிநிதியை பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் பதில் கிடைக்காததால், கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங் நேரடியாக கயல்விழி அழகிரியிடம் தகவல் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.