📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 24, 2026 08:30 AM

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் முறையீடு

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் முறையீடு

புதுடெல்லி,

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு அனுமதி கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு முறையிட்டது.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. "முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தவும். பராமரிப்பு பணிகளுக்கும் மரங்களை வெட்ட தமிழக அரசை அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தர விட வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளுக்கான பொருட்களை எடுத்துச் செல்ல தமிழகத்துக்கு அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும். முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் உள்ள வல்லக்கடவு - முல்லைப் பெரியார் காட்டுச் சாலையை சீரமைக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும். கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின்படி முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவை அளவிடும் கருவிகளை பொருத்த கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

விரைந்து விசாரிக்க வேண்டும்