முன்னாள் முதல்வர் சிலைக்கு தி.மு.க.,வினர் மலர் அஞ்சலி
திருக்கோவிலுார்: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு சிந்தாமணியில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தலைமையில், விக்கிரவாண்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகில் இருந்து கட்சியினர் மவுன ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து, சிந்தாமணியில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ் அப்துல் சலாம், தலைமை கழக வழக்கறிஞர் சுரேஷ், மாநில மகளிர் அணி பிரசார குழு செயலாளர் தேன்மொழி.
ஒன்றிய செயலாளர்கள் தங்கம், ரவிச்சந்திரன், மும்மூர்த்தி, ரவிதுரை, வேம்பி ரவி, ஜெயபால், பிரபு, முருகன், விஸ்வநாதன், லுாயிஸ், தீனதயாளன், சடகோபன், கில்பர்ட் ராஜ், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன்.
பேரூராட்சி செயலாளர் நைனா முகமது, ஒன்றிய சேர்மன்கள் கலைச்செல்வி, சங்கீதஅரசி, ஓம்சிவசக்திவேல், பேரூராட்சி சேர்மன் அன்பு உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.