📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 09, 2026 09:32 PM

தென் மாநிலங்களில் தொகுதியை குறைக்க திட்டமிட்ட அரசியல் சதி நடக்கிறது: வீரபாண்டியன் குற்றச்சாட்டு

தென் மாநிலங்களில் தொகுதியை குறைக்க திட்டமிட்ட அரசியல் சதி நடக்கிறது: வீரபாண்டியன் குற்றச்சாட்டு

தென் மாநிலங்களில் தொகுதியை குறைக்க திட்டமிட்ட அரசியல் சதி நடக்கிறது: வீரபாண்டியன் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை: தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் இணைப்பு சங்கமாக, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தை இணைக்கும் விழா திருவண்ணாமலையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு முழுவதும் 12,484 கிராம ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களை தமிழக அரசு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும். தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும். இவர்களுடைய கோரிக்கை மீது அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். வேலையில்லாத காலத்தில் நிவாரணம் வழங்க வேண்டும்.

நீட் விலக்கு அளிக்க வேண்டும். தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியது. எனவே, தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டுக்கான தொகுதிகளை குறைக்கக்கூடாது. வட மாநிலங்களில் தொகுதிகளை அதிகரிக்கவும், தென் மாநிலங்களில் தொகுதியை குறைக்கவும் திட்டமிட்ட அரசியல் சதி நடக்கிறது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில், தமிழக அரசுடன் இணைந்து போராடுவோம்.

மேகதாது அணை கட்டுவது சட்டவிரோதமானது. காவிரி நதிநீர் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள நலத்திட்டங்கள் தொடர வேண்டும். எக்காரணம் கொண்டும் நலத்திட்டங்களை நிறுத்தக்கூடாது. திட்டங்களின் பெயர்களை மாற்றக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.