📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 21, 2026 01:32 AM

முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களை பணி நீக்கம்

முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களை பணி நீக்கம்

கோவை மாநகராட்சியில், அ.தி.மு.க. ஆட்சியில் தேர்வு நடைமுறைகளை பின்பற்றாமல் 54 இளநிலை உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டதாக கடந்த 2021-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், கோவை மாநகராட்சியில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

காலியான பணியிடங்களுக்கு தகுதியானவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், முறைகேடான பணி நியமனங்களுக்கு துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.