📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 20, 2026 02:34 PM

முதலமைச்சர் விஜய்யின் 'ஜனநாயகன்'...டிக்கெட் விலை கேட்டே ரசிகர்கள் ஷாக்!

முதலமைச்சர் விஜய்யின் 'ஜனநாயகன்'...டிக்கெட் விலை கேட்டே ரசிகர்கள் ஷாக்!

முதலமைச்சர் விஜய்யின் 'ஜனநாயகன்'...டிக்கெட் விலை கேட்டே ரசிகர்கள் ஷாக்!

வருகின்ற ஜுலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவருகின்ற முதலமைச்சர் விஜயின் ஜனநாயகன் படத்தின் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது.

தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்று முதல் படமாக திரைக்கு வரவுள்ளதால் இந்திய அளவில் இத்திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் உற்சாகமாக கொண்டாட காத்திருக்கின்றனர்.ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி, இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் தாமத்தினால் வெளியாகமல் படம் தள்ளிப்போனது.ஒரு வழியாக பல்வேறு பிரச்சனைகளை தாண்டி மத்திய தணிக்கை வாரியம் படத்திற்கு ”ஏ” சான்றிதழ் வழங்கியது. இதனையடுத்து படம் வருகிற 23 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. பல தடைகளை தாண்டி படம் வெளிவருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.மேலும் தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்று முதல் படமாக திரைக்கு வரும் என்பதால் இந்திய அளவில் படத்தினை திரையில் காண்பதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் குஷியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் படத்தின் டிக்கெட் விலை பொதுவாக ரூ 100 முதல் ரூ 800 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெங்களூரு, ஹைதராபாத்,மும்பை டெல்லி,கேரளா, பகுதிகளில் டிக்கெட்டின் விலை உயர்ந்துள்ளது. முதல் காட்சிக்கான டிக்கெட் முன்பதிவு ஆயிரத்துக்கு மேல் இருந்தாலும் முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன.பெங்களூரு சினி போலீஸ் நெக்ஸஸ் சாந்தி நிகேதனில் சாய்வு இருக்கையில் டிக்கெட் விலை ரூ.2500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் இதுதான் அதிகபட்ச விலை ஆகும்.