📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health August 29, 2026 10:04 AM

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; தபால் நிலையங்களில் 23,757 போஸ்ட் மாஸ்டர் வேலை

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; தபால் நிலையங்களில் 23,757 போஸ்ட் மாஸ்டர் வேலை

ETV Bharat / education-and-career

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; தபால் நிலையங்களில் 23,757 போஸ்ட் மாஸ்டர் வேலை - தேர்வு, நேர்காணல் கிடையாது

அஞ்சல் துறையில் இருக்கும் இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் இல்லாமல், 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Published : August 29, 2026 at 7:57 AM IST

இந்திய அஞ்சல் துறையில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் ஆகிய பதவிகளில் உள்ள 23,757 காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீங்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை வேண்டுமா? உங்களுக்கான மெகா அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் உள்ள கிராமின் தக் சேவக் (GDS) எனப்படும் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவியில் உள்ள காலிப்பணியிடங்கள் நேரடியாக இந்திய அஞசல் துறையின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான இரண்டாம் கட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள 23,757 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,118 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இப்பணியில் மிக முக்கிய சிறப்பு எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்று எதுவுமில்லாமல், 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே ஆட்கள் தெரிவு செய்யப்பட்டு பணி வழங்கப்படும். இப்பணிக்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்கும் நிலையில், இப்பணி குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்திய அஞ்சல் துறை கிராமின் தக் சேவக் வேலைவாய்ப்பு 2026

முன்னரே குறிப்பிட்டப்படி, அஞ்சல் துறையில் கிராமின் தக் சேவக் (GDS) எனப்படுவது கீழ் கிளை போஸ்ட் மாஸ்ட் (BPM) மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) ஆகிய பதவிகள் நேரடியாக விண்ணப்பம் பெறப்பட்டு நிரப்பப்படுகிறது.

இப்பதவிக்கு தேர்வாகும் நபர்கள் தபால் நிலையங்களில் உள்ள தினசரி வேலைகளை மேற்கொள்வார்கள். தபால் தலை மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்வது, கடிதங்களை சரியாக முகவரிக்கு கொண்டு போய் சேர்ப்பது, தபால் வங்கி சேவைகளை வழங்குவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.

தகுதிகள் என்னென்ன?

இப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 21-ம் தேதியின்படி, விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம். இதில் மத்திய அரசு விதிமுறைகளின் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதியாக மாநில அல்லது மத்திய பாடத்திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடங்களை கொண்டு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 10-ம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயம் ஒரு பாடமாக கொண்டு படித்திருக்க வேண்டும்.

இவைமட்டுமின்றி, கணினி இயக்கும், மிதிவண்டி ஓட்டுவது ஆகிய திறன்களை பெற்றிருக்க வேண்டும்.

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் கணினி தொழில்நுட்ப முறையில் ஆட்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தபால் வட்டத்தில் செயல்படும் தபால் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப, அப்பகுதியில் இருந்து விண்ணப்பவர்களின் இருந்து அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் தேர்வார்கள். இப்பணியிடங்களுக்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும். விண்ணப்பதாரர் எந்த தபால் நிலையத்திற்கு விண்ணப்பிக்கீறார்களோ, அந்த நிலையத்திற்குள் அடங்கிய பகுதியில் இருப்பது அவசியமாகும்.

தேர்வானவர்களின் தரவரிசை பட்டியல் வெளியானதும், சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு விடுக்கப்படும். அப்போது, அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், அடையாள அட்டை, வகுப்பு சான்றிதழ், மாற்றுத்திறனாளி விண்ணப்பதார் என்றால் அதற்கான சான்றிதழ், திருநர் என்றால் அதற்கான சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். மேலும், அரசு மருத்துவர் வழங்கிய மருத்துவ சான்றிதழை சமர்பிப்பது கட்டாயமாகும்.

சம்பளம் எவ்வளவு?

விண்ணப்பிப்பது எப்படி?

தபால் நிலையங்களில் உள்ள இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் https://www.indiapost.gov.in/gdsonlineengagement என்ற பிரத்யேக இணையதளம் வழியாக வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் பதிவு செய்துகொள்ளலாம். ஆன்லைன் விண்ணப்பம் செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கும் நிலையில், 21-ம் தேதி வரை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், செப்டம்பர் 23, 24 ஆகிய தேதிகளின் விண்ணப்பம் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும். அதனையடுத்து, விரைவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பட்டியல் வெளியாகும்.

முக்கிய நாட்கள்

தபால் துறையில் வேலை எதிர்பார்க்கிறவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும். இருக்கும் பகுதியிலேயே பகுதி நேரத்தில் அரசு வேலை கிடைப்பதால், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பெரும்பாலும் பயன்படுத்திக்கொள்வார்கள்.