📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 30, 2026 03:33 PM

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக, கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று முதல் 3 நாட்களுக்கான மழை நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

ஜூலை 30ம் தேதி; நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதிகளில்; குமரி, தேனி, நீலகிரி, கோவை மற்றும் திருநெல்வேலியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.