📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics November 28, 2026 04:01 PM

நிர்வாகத்தில் பெண்களுக்கு கூடுதல் பலம்; அனைத்துக் கட்சிகளுக்கும் அமித் ஷா வேண்டுகோள்

நிர்வாகத்தில் பெண்களுக்கு கூடுதல் பலம்; அனைத்துக் கட்சிகளுக்கும் அமித் ஷா வேண்டுகோள்

புதுடில்லி: நிர்வாகத்தில் பெண்களுக்கு கூடுதல் பலம் அளிக்கும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு அளிக்குமாறு, அனைத்துக் கட்சிகளுக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது எக்ஸ்தளப்பதிவு; தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தில் பெண்களுக்கு வலுவான பங்களிப்பை வழங்குவது மோடி அரசின் உறுதிப்பாடு. பிரதமர் மோடியின் தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை 132வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், நாட்டுப் பெண்களின் பல ஆண்டு காத்திருப்பு முடிவுக்கு வரவுள்ளது.

மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தின் மூலம் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள 33 சதவீத இடஒதுக்கீடு இப்போது சாத்தியமாக உள்ளது. சட்டசபைகளில் பெண்களுக்குக் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

லோக்சபாவில் பெண்களின் இருப்பு கொள்கை உருவாக்கம், சட்டம் இயற்றுதல் மற்றும் தேசிய முன்னுரிமைகளை நிர்ணயிப்பதில் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கும். நிர்வாகத்தில் பெண்களுக்கு கூடுதல் பலம் அளிக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சிக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.