நகை வாங்குறவங்களுக்கு குட் நியூஸ்... இன்று மீண்டும் குறைந்த தங்கம் விலை!
சென்னை : ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வாரத்தின் தொடக்க நாளான நேற்று சென்னையில் 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,250-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று தங்கம் விலையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,200-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
அதே சமயம், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையே தொடர்கிறது. சென்னையில் நேற்றைய தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போதும் அதே விலையில்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனையாகி வருகிறது.
மேலும், கடந்த ஆகஸ்ட் முதல் நாள்களில் தங்கத்தின் விலையானது தொடர்ச்சியான மாற்றங்களை சந்தித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் தங்கம் விலையானது ஒரு கிராம் ரூ.14,422 என்ற அளவிலும், 8 கிராம் ரூ.1,15,376 என்ற அளவிலும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 3-ஆம் தேதியன்று விலையில் சற்று உயர்வு ஏற்பட்டு ஒரு கிராம் ரூ.14,455-க்கும், 8 கிராம் ரூ.1,15,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.