📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology May 28, 2026 12:32 AM

நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில் மீண்டும் 'ஜவுளித் தொழில்நுட்பம்' பாடம்

Technology

நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில் மீண்டும் 'ஜவுளித் தொழில்நுட்பம்' பாடம்

Google News Tamil Technology

திருப்பூர்: திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், ஜவுளித் தொழில் நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவு, மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

பின்னாலை, மெஷினரி துறைகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையிலான தொழிற்கல்வி பாடப்பிரிவு, தமிழக அளவில் வெறும் ஆறு பள்ளிகளில் மட்டுமே இருந்தது; அதில், திருப்பூர் நஞ்சப்பா பள்ளியும் ஒன்று. அதற்கான ஆசிரியர் பணியிடம் காலியானதால், அந்த பாடப்பிரிவு தற்காலிகமாக நீக்கப்பட்டது.

பின்னலாடை நகரான திருப்பூரில் வேலை வாய்ப்புக்கு வழி வகுக்கும் இப்பாடப்பிரிவை மீண்டும் கொண்டு வர வேண்டும் என, பலரும் வலியுறுத்தினர். இதுதொடர்பான செய்தி, கடந்தாண்டு, ஏப். 15ம் தேதி 'தினமலர்' நாளிதழில் வெளியானது.

இந்நிலையில், இந்த கல்வியாண்டில் மீண்டும் இப்பாடப்பிரிவு கொண்டு வரப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்பில், ஜவுளித்தொழில் நுட்பம், அடிப்படை இயந்திரவியல் பொறியியல் மற்றும் தொழில் முனைவோர் திறன் செய்முறை பயிற்சி ஆகிய பாடப்பிரிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.