📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 17, 2026 06:36 PM

நடுவர்களுக்கு ஊதிய உயர்வு.. பிசிசிஐ கொடுத்த இனிப்பான செய்தி.. விவரம்

நடுவர்களுக்கு ஊதிய உயர்வு.. பிசிசிஐ கொடுத்த இனிப்பான செய்தி.. விவரம்

நடுவர்களுக்கு ஊதிய உயர்வு.. பிசிசிஐ கொடுத்த இனிப்பான செய்தி.. விவரம்

மும்பை: இந்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பணியாற்றும் நடுவர்கள் மற்றும் Match Referees அடுத்த சீசன் முதல் ஒரு நல்ல செய்தி வரவுள்ளது. வரும் 2026-27 சீசன் முதல் உள்நாட்டு நடுவர்கள் மற்றும் மேட்ச் ரெஃப்ரிகளுக்கான போட்டி ஊதியத்தை உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த சீசன், துலீப் கோப்பை தொடர்ந்து, அக்டோபர் 11 அன்று நாட்டின் முதன்மையான சிவப்பு-பந்து உள்நாட்டுப் போட்டியான ரஞ்சி கோப்பையுடன் மீண்டும் தொடங்கவுள்ளது.

"வருகிற 2026-27 உள்நாட்டு சீசன் முதல், உள்நாட்டு நடுவர்கள் மற்றும் மேட்ச் ரெஃப்ரிகளுக்கான ஊதியக் கட்டமைப்பை மாற்றி அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதோடு, உள்நாட்டு நடுவர்களின் குழுவையும் மறுசீரமைக்கத் தீர்மானித்துள்ளோம்" என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்தார்.

மேலும், தகுந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள்நாட்டு நடுவர்களுக்கு தரவரிசை முறையை அறிமுகப்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து வெளியான தகவலின் படி, "உள்நாட்டு நடுவர்கள் ஏ, பி, சி மற்றும் டி என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுவார்கள். இதில் ஏ மற்றும் பி பிரிவுகள் மூத்தோர் உள்நாட்டுப் போட்டிகளில் பணியாற்றும் நடுவர்களுக்காக ஒதுக்கப்படும்.

மற்ற இரண்டு பிரிவுகளான சி மற்றும் டி பிரிவுகளில் இளையோர் போட்டிகளில் பணியாற்றும் நடுவர்கள் இடம்பெறுவர்" என்றார். இதற்கிடையில், பிசிசிஐ தனது வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை அன்று அதன் தலைமையகத்தில் நடத்த உள்ளது.

தற்போது, பிசிசிஐ-யின் சிறந்த 20 உள்நாட்டு நடுவர்களுக்கு ஒரு நாளுக்கான கட்டணமாக 40,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதர பிசிசிஐ உள்நாட்டு நடுவர்களுக்கு தினசரி கட்டணம் 30,000 ரூபாயாக உள்ளது. டி20 போட்டிகளைப் பொறுத்தவரை, ஒரு நாளுக்கான கட்டணம் 20,000 ரூபாயாக இருக்கிறது. வெளியூர் போட்டிகளில் பணியாற்றச் செல்லும் அதிகாரிகளுக்கு தினசரி படியாக 1,500 ரூபாயும், உள்ளூர் அதிகாரிகளுக்கு 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரையும் வழங்கப்பட்டு வருகிறது.