📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 29, 2026 05:03 PM

நுங்கம்பாக்கம் சுவாதி போல ஆய்டுவ.. 40 லட்சம் மோசடி.. 2 முறை கருக்கலைப்பு.. சீரியல் நடிகர் கைது!

நுங்கம்பாக்கம் சுவாதி போல ஆய்டுவ.. 40 லட்சம் மோசடி.. 2 முறை கருக்கலைப்பு.. சீரியல் நடிகர் கைது!

சென்னை: இளம் பெண் வழக்கறிஞரை நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை போல நடக்கும் என மிரட்டியாக கொடுத்த புகாரின் பேரில் சின்னத்திரை மற்றும் சினிமா நடிகர் சரவணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னத்திரை நடிகர் கைது: விருகம்பாக்கம் சாயிஷா அப்பார்ட்மெண்டில் வசித்து வந்த 23 வயதான இளம் பெண், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார். இவருக்கு 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகவும், ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறேன். அப்போது தான் அதே குடியிருப்பில் வசித்து வந்த நடிகர் சரவணனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், இதனால் இருவரும் 2023ஆம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் 'லிவிங் டுெகதர்' முறையில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றினார்: இதனிடையே, நடிகர் சரவணனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது இளம் பெண் வழக்கறிஞருக்குத் தெரியவந்துள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் சரவணனிடம் நியாயம் கேட்டபோது, உன்னையும் முறைப்படி திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி சமாதானப்படுத்தியுள்ளார். ஆனால், கூறியபடி திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் தன்னை இரண்டு முறை கருக்கலைப்பு செய்ய சொல்லி வற்புறுத்தியதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கடுமையாகச் சித்திரவதை செய்ததாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

கொலை மிரட்டல்: ஆனால், இப்போது ஏற்பட்ட தகராறின்போது, நுங்கம்பாக்கம் சுவாதியை போல உன்னை கொலை செய்து விடுவேன் என நடிகர் சரவணன் மிரட்டிய, ஆடியோ ஆதாரத்தையும் அந்த பெண் போலீசாரிடம் ஒப்படைத்தார். அந்த ஆடியோ ஆதரத்தின் பேரில் போலீசார் நடிகர் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதுடன், பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.