📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 05, 2026 08:01 AM

ஒரே இயந்திரத்தில் 4 ஓட்டு போடலாம் :உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த சரிபார்ப்பு

ஒரே இயந்திரத்தில் 4 ஓட்டு போடலாம் :உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த சரிபார்ப்பு

கோவை: உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை ஆணையம் செய்யத் துவங்கியுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பேட்டரி பொருத்தி, சரியாக இயங்குகிறதா என சரிபார்க்கப்பட்டது.

தேர்தல் பிரிவினர் கூறியதாவது:

இனி அரசியல் கட்சியினர் முன்னிலையில் முதல்கட்ட சரிபார்ப்பு செய்யப்படும். அப்போது, 4 ஓட்டுக்கள் எப்படி போடுவது என, பெல் இன்ஜினியர்கள் கற்றுத்தருவர்.

உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், அரசியல் கட்சியினரின் முகவர்களுக்கும் தெரிவிக்கப்படும். ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கற்றுத்தரப்படும்.

மக்கள் தொகை அதிகமுள்ள உள்ளாட்சிகளில் வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. சில ஊரக உள்ளாட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைத்து தி.மு.க. ஆட்சியில் அரசாணை வெளியிட்டது.

கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததும் கிடப்பில் போடப்பட்டது. அந்த உத்தரவு நடைமுறைக்கு வருமா என தெரியவில்லை.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த முடிவு செய்தால், நகர்ப்புற உள்ளாட்சிகளோடு இணையும் உள்ளாட்சிகளை தவிர, மற்றவற்றுக்கு தேர்தல் நடத்த வேண்டும். இயந்திரங்களை தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.