📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News August 19, 2026 09:03 PM

பாகிஸ்தானை புரட்டி எடுத்த இந்தியா.. ஹாக்கி உலகக் கோப்பையில் அபார வெற்றி.. 2

பாகிஸ்தானை புரட்டி எடுத்த இந்தியா.. ஹாக்கி உலகக் கோப்பையில் அபார வெற்றி.. 2

பாகிஸ்தானை புரட்டி எடுத்த இந்தியா.. ஹாக்கி உலகக் கோப்பையில் அபார வெற்றி.. 2-வது சுற்றுக்கு தகுதி

நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீனில் நடைபெற்று வரும் 2026 உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் லீக் ஆட்டத்தில், இந்திய அணி புதன்கிழமை அன்று தனது பரம எதிரியான பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதுடன், பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி, கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் இந்தியாவிற்கான முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 11-வது நிமிடத்தில் அபிஷேக் ஒரு சிறந்த ஃபீல்டு கோல் அடித்து அசத்த, இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்து அணியின் முன்னிலையை 3-0 என உயர்த்தினார்.

இதை அடுத்து பாகிஸ்தான் அணி பதிலடி கொடுக்கத் தொடங்கியது. 22-வது நிமிடத்தில் பாகிஸ்தானின் ஹன்னான் ஷாஹித் கோல் அடித்து 3-1 என மாற்றினார். ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இந்தியாவின் அபிஷேக் மீண்டும் ஒரு கோல் அடிக்க, பாகிஸ்தான் தரப்பில் சுஃப்யான் கான் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா 4-2 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில், 34-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை ஹர்திக் சிங் கோலாக மாற்றி இந்தியாவை 5-2 என வலுவான நிலைக்குக் கொண்டு சென்றார். 46-வது நிமிடத்தில் பாகிஸ்தானின் ஹன்னான் ஷாஹித் மீண்டும் ஒரு கோல் அடித்து 5-3 என நெருக்கடி கொடுத்தார். கடைசி காலாண்டில் பாகிஸ்தான் அணி தீவிரமாகப் போராடிய போதும், இந்திய அணி தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை உறுதி செய்தது.

முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வேல்ஸை 8-2 என வீழ்த்தி பிரிவில் முதலிடம் பிடித்தது. இதன் மூலம் இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அடுத்த சுற்றில் நெதர்லாந்து மற்றும் அர்ஜென்டினா அல்லது நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் மோதவுள்ளன.