📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News August 19, 2026 03:33 PM

அமெரிக்காவை சுற்றி வளைக்கும் ஈரான்’! ஹார்முஸ் மோதலில் புதிய ‘ஹிட் லிஸ்ட்’

அமெரிக்காவை சுற்றி வளைக்கும் ஈரான்’! ஹார்முஸ் மோதலில் புதிய ‘ஹிட் லிஸ்ட்’

அமெரிக்காவை சுற்றி வளைக்கும் ஈரான்’! ஹார்முஸ் மோதலில் புதிய ‘ஹிட் லிஸ்ட்’

மத்திய கிழக்கில் அமெரிக்கா–ஈரான் பதற்றம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை அமெரிக்க ராணுவத் தளங்கள், போர்க்கப்பல்கள், ராணுவ விமானங்கள் மட்டுமே ஈரானின் இலக்காக இருந்த நிலையில், இப்போது அமெரிக்க ராணுவத்துக்கு தளவாட ஆதரவு வழங்கும் வணிக மற்றும் கடல்சார் நிறுவனங்களையும் குறிவைக்கும் ‘ஹிட் லிஸ்ட்’ தயார் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி, சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு புதிய அபாயம் உருவாகியுள்ளது. செய்தியாளர் - M. மீரா

மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றம், ராணுவத் தளங்கள் மற்றும் போர்க்கப்பல்களைத் தாண்டி, போரைத் தாங்கி நிற்கும் வணிக மற்றும் தளவாட வலையமைப்புகளையும் பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்கு தெரிந்தே ஆதரவளிக்கும் கப்பல் நிறுவனங்கள், கப்பல் உரிமையாளர்கள், இயக்குநர்கள் மற்றும் கடல்சார் சேவை நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வருவதாக ஈரான் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கில் நடந்து வரும் போரில் அமெரிக்க ராணுவத் தளங்கள்... போர்க்கப்பல்கள்... ராணுவ விமானங்கள்தான் .ஈரானின் முக்கிய இலக்குகளாக இருந்தது.

ஆனால் இப்போது வெளியாகியுள்ள தகவல்கள், அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் ராணுவ தளவாடங்களை விநியோகிக்கும் வணிக நிறுவனங்களையும் ஈரான் குறிவைத்துள்ளது என்ற புதிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கப்பல் நிறுவனங்கள் முதல் துறைமுக சேவை நிறுவனங்கள் வரை...ஈரானின் புதிய ‘ஹிட் லிஸ்ட்’டில் யார் இருக்கிறார்கள்?

மத்திய கிழக்கில் அமெரிக்கா–ஈரான் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்கு தெரிந்தே ஆதரவளிக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஈரான் ஆய்வு செய்து வருகிறது. அதாவது, இனி போர்க்கப்பல்கள் அல்லது ராணுவத் தளங்கள் மட்டுமல்ல...அந்த ராணுவத்திற்கு பொருட்களை கொண்டு செல்லும் வணிக வலையமைப்புகளை கண்காணிப்புக்குள் கொண்டு வந்துள்ளது ஈரான்.

அமெரிக்கப் படைகளுக்கு தேவையான எரிபொருள், வெடிமருந்துகள், ராணுவ உபகரணங்கள், உணவு மற்றும் பிற பொருட்களை எடுத்துச் செல்லும் நிறுவனங்கள் குறித்த முதற்கட்ட பட்டியலை ஈரான் தயார் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்,கப்பல் உரிமையாளர்கள், கப்பல் மேலாளர்கள் இயக்குநர்கள்,துறைமுக சேவை நிறுவனங்கள், கடல்சார் சேவை வழங்குநர்கள், வணிக இடைத்தரகர்கள் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் ஈரான் கூறியுள்ள முக்கியமான விஷயம் ஒரு கப்பல் எந்த நாட்டின் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது மட்டும் முக்கியமல்ல.

அந்த நிறுவனம் உண்மையில் யாருக்கு என்ன சேவை செய்கிறது என்பதே முக்கியம் என ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் தளவாட நடவடிக்கைகளுக்கு தெரிந்தே உதவி செய்ததாக கண்டறியப்பட்டால், மூன்றாம் நாட்டில் பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனமாக இருந்தாலும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடலாம் என எச்சரித்துள்ளது.

சில கப்பல் நிறுவனங்கள் மற்றும் குறிப்பிட்ட கப்பல்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால் இது இறுதிப் பட்டியல் அல்ல என்றும் கூறப்படுகிறது. அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக கண்டறியப்படும் மேலும் பல நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.இதனால், ஏற்கனவே பதற்றத்தில் இருக்கும் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு இது மிகப்பெரிய சவாலாக மாறக்கூடும்.

இந்த எச்சரிக்கை செயல்படுத்தப்பட்டால், எரிபொருள் விநியோகம், கப்பல் போக்குவரத்து, துறைமுகச் சேவைகள் மற்றும் பிற தளவாட அமைப்புகள் புதிய பாதுகாப்பு அபாயங்களை எதிர்கொள்ளக்கூடும்.

அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வணிக வலையமைப்புகளும் மோதலின் ஒரு பகுதியாகக் கருதப்படலாம் என்ற இந்த எச்சரிக்கை, மத்திய கிழக்கின் ஏற்கனவே சிக்கலான கடல் பாதுகாப்புச் சூழலை மேலும் பதற்றமாக்கியுள்ளது.