Politics
November 30, 2026 03:01 AM
பார்லி.யில் மத்திய அரசின் மசோதாக்களை எதிர்த்து ஓட்டு; சமாஜ்வாதி எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு
பார்லி.யில் தாக்கல் செய்யப்பட இருக்கும் திருத்தப்பட்ட தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு எதிராக எம்பிக்கள் ஓட்டு போட வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் எம்பியும், கொறடாவுமான தர்மேந்திர யாதவ் வெளியிட்டுள்ள உத்தரவு;
நவ.30ம் தேதி முதல் டிச.3ம் தேதி நடக்க இருக்கும் பார்லி. சிறப்புக் கூட்டத் தொடரில் கட்சியின் அனைத்து எம்பிக்களும் தவறாது ஆஜர் ஆக வேண்டும். மத்திய அரசு முன் மொழியும் சட்ட மசோதாக்கள் ஓட்டெடுப்புக்கு விடும் போது அதற்கு எதிராக ஓட்டு போட வேண்டும்.
இவ்வாறு அவர் தமது உத்தரவில் கூறி உள்ளார்.
சமாஜ்வாதியை போன்றே, அகில இந்திய திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், தங்கள் கட்சி எம்பிக்களுக்கு கொறடா உத்தரவுகளை வெளியிட்டு உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
Politics