📅 Monday, 30 November 2026 IST | கார்த்திகை 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics November 30, 2026 03:01 AM

வாக்காளர் பட்டியலில் திருத்தம் 2,093 ஓட்டுச்சாவடிகளில் முகாம்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் 2,093 ஓட்டுச்சாவடிகளில் முகாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று, 2,093 ஓட்டுசாவடிகளில், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடந்தது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளிலும், 2027 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ள, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நடந்து வருகிறது. நேற்று, 2,093 ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நடந்தது. இதில், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களும், 18 வயது பூர்த்தியடைந்தவர்களும், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளவும் படிவங்களை சமர்ப்பித்தனர்.கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடி மையத்தில் நடந்த சிறப்பு முகாமை, கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். ஓட்டுச்சாவடிக்கு நேரில் சென்று மனு அளிக்க இயலாதவர்கள், http://voters.ecl.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வில், ஆர்.டி.ஓ., பூமா, தாசில்தார் ராஜலட்சுமி, நகராட்சி ஆணையாளர் சேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.