பார்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; இன்றும் இரு அவைகளும் ஒத்திவைப்பு
நமது டில்லி நிருபர்
பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் கடந்த, 20ல் தொடங்கிய நிலையில், 'நீட்' வினாத்தாள் கசிவு தொடர்பாக டில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டம் நாடு முழுதும் பரவியது. பார்லி.,யிலும் இந்த விவகாரம் எதிரொலித்த நிலையில், கூட்டத்தொடர் நடக்காமல், இரு சபைகளிலும் எந்த அலுவலும் நடக்காமல் முடங்கி வருகின்றன.
இந்நிலையில் இன்றும் (ஜூலை 28) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் எம்பிக்கள் கண்டு கொள்ளாமல் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. அவையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.
சிறப்பு வீடியோ!
7வது நாளாக பார்லி முடக்கம்; 2 சபைகளிலும் எதிர்கட்சிகள் அமளி: தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்