📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 22, 2026 03:34 PM

பேரலையாக உயரும் தங்கம் விலை

பேரலையாக உயரும் தங்கம் விலை

பேரலையாக உயரும் தங்கம் விலை - சவரனுக்கு இன்று ரூ. 1,680 அதிகரிப்பு

வெள்ளி கிராமுக்கு ரூ. 5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 245-க்கும், கிலோவிற்கு ரூ.5,000 அதிகரித்து, ஒரு கிலோ ரூ. 2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Published : July 22, 2026 at 10:38 AM IST

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 22) சவரனுக்கு ரூ. 1,680 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,07,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிகழ்வுகளின் அடிப்படையில் தங்கத்தின் விலையில் ஒவ்வொரு நாளும் மாற்றம் அடைந்து வருகிறது. மேற்காசிய போர் காரணமாக தங்கத்தின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில், கச்சா எண்ணெய்யின் மீதான மூதலீடு மற்றும் அமெரிக்கா டாலர் மதிப்பு உயர்வு ஆகிய காரணங்களினால், படிப்படியாக குறைய தொடங்கியது.

கடந்த மாதம் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்த போடப்பட்ட நிலையில், மீண்டும் தங்கம் விலை உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பெரிய அளவிலான ஏற்றம் இல்லாமல் இருந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியது.

இது தங்கத்தின் மீது எப்படி தாக்கம் ஏற்படுத்தும் என தெரியாத சூழலில் காலை, மாலை என இரு வேளையும் தங்கத்தின் விலை மாற்றம் கண்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் கடந்த மூன்று நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.

நேற்றைய தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 13,220-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மேலும் ரூ. 210 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 13,430-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போன்று, நேற்று ஒரு சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 1,05,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மீண்டும் ரூ. 1,680 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,07,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ.13,430

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ.1,07,440

வெள்ளி 1 கிராம் - ரூ.245

வெள்ளி 1 கிலோ - ரூ.2,45,000

கடந்த 10 நாட்களில் 22 காரட் தங்கத்தின் விலை

வெள்ளி விலையை பொறுத்தவரை நேற்று ஒரு கிராமுக்கு ரூ. 5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 240-க்கும், கிலோ ரூ. 2,40,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று கிராமுக்கு மீண்டும் ரூ. 5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 245-க்கும், கிலோவிற்கு ரூ.5,000 அதிகரித்து, ஒரு கிலோ ரூ. 2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.